கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சாமி சிலைகள் சேதம்

லாலாபேட்டை அருகே உள்ள கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சாமி சிலைகள் சேதம் அடைந்தது. மேலும் கோவிலில் படுத்து இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட பறவைகள் செத்தன.

Update: 2022-10-11 19:30 GMT

மின்னல் தாக்கியது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டையை அடுத்துள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோபுரங்கள் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மிகப்பெரிய சத்ததுடன் வெற்றி விநாயகர் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த விநாயகர் சிலை உட்பட இரண்டு சாமி சிலைகள் சேதமடைந்தன.

3 பேர் காயம்

அப்போது கோவிலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பிரசாத்(வயது 19), கவிபாரதி(23), அய்யப்பன்(27) ஆகிய மூன்று பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. கோவில் அருகே உள்ள மரங்களில் அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட காகம், குருவி உள்ளிட்ட பறவைகள் இறந்த நிலையில், ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் வருவாய் துறையினர் மற்றும் லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்