சிறுவாபுரி முருகன் கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-11-14 11:12 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோவில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்துடன் சிறுவாபுரி கோவிலுக்கு நேற்று திடீரென வருகை தந்து பக்தியுடன் மனம் உருகி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக அவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் அழிஞ்சிவாக்கம் எம்.பாஸ்கரன், மாநில செயலாளர் ஆர்.சி.பாலாஜி, மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், மோகன்ராஜ் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்