சம்பா சாகுபடி வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
சம்பா சாகுபடி வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தாா்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிரை 11 ஆயிரம் எக்டர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் உள்ளதா என குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ் தலைமையில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடராஜன், காயத்ரி, ஜெயக்குமார் கொண்ட குழுவினர் குமராட்சி வட்டாரத்தில் எள்ளேரி, பரிவிளாகம் போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், அங்கிருந்த விவசாயிகளிடம், தற்போது பயிரில் இலை கருகல் நோய் மற்றும் குலை நோய் தாக்குதல் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நோய் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க வேண்டும் என்றனர். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் சிந்துஜா உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.