சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூலானது

Update: 2023-01-20 18:40 GMT

சமயபுரத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் 27 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக 1 கோடியே 16 லட்சத்து 53 ஆயிரத்து 286 ரூபாயும், ஒரு கிலோ 955 கிராம் தங்கமும், 4 கிலோ 215 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 367-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்