மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

Update: 2023-01-30 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் தமிழ் இளைஞர் நல சங்கம் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. மார்க்கெட் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன், சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர் முத்து, ராஜேந்திரன், சண்முகனார், அய்யம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலை சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்துகொண்டு பேசுகையில், தமிழர்கள் தமிழால் ஒன்றுபடாமல் சாதியால் பிளவு பட்டு கிடக்கிறார்கள். இதனால் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழ் பெண்கள் மீதான தாக்குதல் தொடங்கி, பெண்ணியம் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவரின் ஆதிக்கமே உள்ளது. தமிழும், தமிழரும் தலைநிமிர்ந்து வாழ இளைய தலைமுறையினர் ஒன்று பட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்