முள்ளக்காட்டில் உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முள்ளக்காட்டில் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-21 12:58 GMT

ஸ்பிக்நகர்:

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முள்ளக்காட்டியில் சி.ஐ.டி.யு. உப்பள தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகன், சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பொன்ராஜ், ராமசாமி, சங்கரன், மணவாளன், பன்னீர்செல்வம், பன்னீர், பாக்கியலட்சுமி, முனியசாமி, பக்கிள், லிங்கம்மாள் உள்பட உப்பளத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்