வடமாநில வாலிபர் கொலை வழக்கில் சலூன் கடைக்காரர் கைது

காட்பாடியில் நடந்த வடமாநில வாலிபர் கொலை வழக்கில் சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். முடி திருத்தம் செய்துகொண்டு பணம் தராததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-06 18:37 GMT

காட்பாடியில் நடந்த வடமாநில வாலிபர் கொலை வழக்கில் சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். முடி திருத்தம் செய்துகொண்டு பணம் தராததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

வடமாநில வாலிபர் கொலை

காட்பாடி காந்திநகர் வணிகவளாகம் அருகே கடந்த 22-ந் தேதி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கிடந்தார். அவரை விருதம்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபனிசரணியா (வயது 34) என்பது தெரியவந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த சலூன் கடைக்காரர் விஜயராகவன் (26) என்பவர் அபனிசரணியாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

முடி திருத்தம்

கொலை செய்யப்பட்ட வடமாநில நபர் அசாமில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வந்ததுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே சாலையில் நடந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அவர் எங்கு சென்றார் என்று ஆய்வு செய்யப்பட்டதில், தனியார் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஒரு சலூன் கடைக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக் கொண்டு வெளியே வந்ததும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் முடி திருத்தம் செய்துகொண்டுள்ளார். என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அவர் சென்ற சலூன் கடையில் விசாரணை நடத்தினோம். சம்பவத்தன்று கடைக்கு வந்த நடமாநில நபர் முடி வெட்டி உள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் விஜயராகவன் சவர கத்தியால் அபனிசரணியாவின் கழுத்தை அறுத்துவிட்டார். அங்கிருந்து வெளியே சென்றபின்னர் வடமாநில நபர் இறந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

போலீசாருக்கு பாராட்டு

வேலூர் மத்திய ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ரவுடி மதுரை பாலா (வயது 35) என்பவரை வேலூர் ஆயுதபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை அங்கு 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்துவிட்டு பாலாவை கொலை செய்ய முயன்றனர். எனினும் போலீசார் பாலாவை காப்பாற்றினர். தப்பியோடியவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.

அப்போது போலீஸ்காரர்கள் பாரதி, பிரசாந்த், வெங்கடேசன் ஆகியோர் 3 பேரை பிடித்தனர். பாரதி என்பவருக்கு கையில் வெட்டு விழுந்தது. பிடிபட்டவர்களிடம் இருந்து 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரேவை போலீசார் பறிமுதல் செய்தனர். திறம்பட செயல்பட்ட போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்