சேலம்-ஓமலூர் இடையே இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
சேலம்-ஓமலூர் இடையே இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சூரமங்கலம்:
சேலம்-ஓமலூர் இடையேயான ரெயில் வழித்தடம், இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளதாவது:-
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ஓமலூர் வரை ரெயில் இரு வழிப்பாதை மற்றும் மின் மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவின் தலைமை நிர்வாக அலுவலர் இதனை ஆய்வு செய்கிறார். எனவே சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரெயில் வழித்தடத்தை கடக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.