நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னை,
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதலை அதிகரித்துள்ளோம். 10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது.அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.