கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை:4 ஓட்டல்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-15 18:45 GMT

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவனங்களில் காலாவதியான, கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் மதன்குமார், துப்புரவு ஆய்வாளர் சூரியகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது சில கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சுமார் 25 கிலோ காலாவதியான பொருட்கள், 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர். கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டல், கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள், காலாவதியான, கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்தால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்