தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட உள்ளதாக தஞ்சை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
76-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்திய தேசியக்கொடி மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும். மேற்குறிப்பிட்ட விற்பனை அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களிலும் நேரடியாகவும், indiapost/gov.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து தங்களுக்கு தேவையான தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம். தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனையை தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சை கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் தேசியக்கொடிகள் தொடர்பான தேவைகளுக்கு துணை தபால் கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்த் 9786169923, வணிக விற்பனை அலுவலர் வித்யா 9655791898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.