மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, திண்டுக்கல் மாவட்டம் ஊத்தம்பட்டி அடுத்த தேவ நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் மாரிமுத்து (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 93 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.