மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை : புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது;
மதுரை,
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க தமிழக போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரை மாநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.0452-2520760 மற்றும் 83000 21100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.