கள்ளக்குறிச்சியில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சியில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

Update: 2023-05-03 18:45 GMT

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 162 விவசாயிகள் 855 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஏலத்தில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 521-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 799-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக விலை 5 ஆயிரத்து 555-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.3 ஆயிரத்து 838-க்கும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.19 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த வாரம் 1,870 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற சந்தையில் 855 மூட்டை தான் வந்துள்ளதாக கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்