கடலூர் துறைமுகத்தில்ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை?மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கடலூர் துறைமுகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை? செய்யப்படுகிறதா? என மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-12-29 20:10 GMT


கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன், கடலோர அமலாக்க பிரிவு காவலர்கள் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக்கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? என்றும் மீன்கள் தரமாக உட்கொள்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிசெய்தனர். மேலும் மீன்வியாபாரிகளால் தரமற்ற மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து மீன்வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். மீன்களை சுகாதாரமான முறையில், விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்