சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக்பள்ளி சாதனை

சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-05-21 19:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சாலையில் கோவில்வயல் பகுதியில் சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் 1,500-க்கு மேற்பட்ட மாணவிகள் கல்விக்கற்று வருகின்றனர். பள்ளி தாளாளர் எஸ்.சேக் அலாவுதீன், சேர்மன்கள் எஸ்.முகமது கனி, எஸ்.முகமது ஹம்ஷா ஆகியோர் தலைமையில் மிகச்சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த மாணவி சபிகா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்தும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி தன்னியாஸ்ரீ அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். சிவ அனுசியா அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3-ம் இடமும், சுபஸ்ரீ அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 4-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் சார்பாக பாராட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி சபிகா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று 15-க்கு மேற்பட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 450-க்கு மேல் 25 மாணவிகள் பெற்றுள்ளனர். சாதனை புரிந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். சாதனை புரிந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் முதல் அமைச்சர்கள் வரை பாராட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்