புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது.

Update: 2023-10-02 19:00 GMT

சிவகங்கை மாவட்டம் மிக்கேல் பட்டினம் கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா மற்றும் நற்கருணை நாத பெருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி தினசரி சிறப்பு திருப்பலி மற்றும் அருளுரை நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் நாள் திருச்சி புனித பவுல் கிருத்துவ கல்லூரி பேராசிரியர் மைக்கேல் ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேர் பவனி நடந்தது. பின்னர் கிளமெண்ட் ராஜா தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை நாதரின் பெருவிழா நடந்தது. பச்சேரி சுந்தர்ராஜன் அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கிராம நிர்வாக குழுவினர், ஏசுவின் நண்பர்கள் இளையோர் இயக்கம் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்