சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூரில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வருகிற 24 ந் தேதி நடக்கிறது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வருகிற 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7.30 மணியளவில் அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள், கோபுர கலச பிரதிஷ்டை மற்றும் மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பின்னர் 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9 மணிக்கு கலச புறப்பாடு மற்றும் யாத்ரா தானம் நடைபெற்று 10.10 மணிக்கு மூலவர் கோவில் விமானத்துக்கும், 10.20 மணிக்கு சீரடி குபேர சாய்பாபாவுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு சாய்பாபா வீதி உலா புறப்பாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் முன்னின்று செய்து வருகின்றனர்.