கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி கடலில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதி போல் ஊடுருவ முயன்ற 9 ே்பர் பிடிபட்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதி போல் ஊடுருவ முயன்ற 9 ே்பர் பிடிபட்டனர்.

பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக கடலோர பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கு 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கடல் பகுதி உள்ளது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையில் போலீசார் கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் கன்னியாகுமரியில் இருந்து நீரோடி வரை இன்னொரு குழுவினரும் ரோந்து சென்றனர். அதே சமயம் கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஜீப்பில் ரோந்து சென்று கண்காணித்தனர். இ்தில் கியூ பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.

9 பேர் பிடிபட்டனர்

இந்த ஒத்திகையின் போது கன்னியாகுமரி அருகே சந்தேகப்படும்படியாக படகு ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது படகில் இருந்தவர்கள் மீனவர்கள் என்று கூறினார்கள்.

உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். ஆனால் அவர்களிடம் மீனவர்களுக்கான அடையாள அட்டை இல்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் வந்த படகை சோதனை செய்தபோது அதில் டம்மியான ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டம்மி வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிடிபட்டவர்களில் 8 பேர் போலீசாரும், ஒருவர் கப்பல் படை வீரரும் ஆவர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை பாதுகாப்பு குழும போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்