ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா

ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-17 15:57 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபியில் 94-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இப்பெருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. விழா தொடக்க நாளான நேற்று மாலையில் பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கெபியை வந்தடைந்தது. பின்னர் நேற்று மாலை 6.45 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றினார். மணவை வட்டார அதிபர் ஜான்செல்வம் மறையுரையாற்றினார்.

கொடியேற்று நிகழ்ச்சியில், பங்குதந்தைகள் ஜெயக்குமார், விக்டர் லோபோ, ஆச்சரியம், செல்வன், ஜோசப் ரத்தினராஜ், பீட்டர் பால், சில்வெஸ்டர், வில்லியம், டிமல், அமல்ராஜ், ஆலந்தலை ஊர்நல கமிட்டி தலைவர் ரமேஷ், ரொசாரி மாதா சபை தலைவர் ரூபின்ஸ்டன், நிதிக்குழு செயலாளர் லிபோரியஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்