உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும், நெல் மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 13-வது நாள் போராட்டமாக 10 கோரிக்கைகளில் ஒன்றான தென்னங்கள் இறக்க அரசு அனுமதி வழங்கக்கோரி தென்னை மரத்தை நட்டு கள் இறக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் தொட்டிப்பாலத்தின் அருகே கல்குவாரி அமைத்து வெடி வெடிப்பதால் தொட்டிப்பாலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கல்குவாரிக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.