ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்' கோவில்பட்டி யூனியன் அலுவலகம் வெறிச்சோடியது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புதன்கிழமை சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-11-23 18:45 GMT

கோவில்பட்டி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

சிறுவிடுப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 2 ாட்களுக்கு ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டமும், அடுத்த மாதம்(டிசம்பர்)14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உள்ள 50 ஊழியர்களில் 36 பேர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகத்திற்கு பொறியாளர்கள் மேரி, படிபீவி உள்பட 4 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

இதனால் அலுவலர்கள் இல்லாமல் யூனியன் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. எந்த பணியும் நடைபெறவில்லை.

கோரிக்கைகள்

ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொளி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர் களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்குதல், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்