கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18½ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
எடப்பாடி:
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த பொது ஏலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 850 பருத்தி மூட்டைகள் 175 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.6,650 முதல் ரூ.7,569 வரை விற்பனையானது. இதே போல் கொட்டு ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.3,200 முதல் ரூ.4,900 வரை விலை போனது. நாள் முழுவதும் நடந்த ஏலத்தின் மூலம் ரூ.18½ லட்சம் பருத்தி விற்பனை ஆனது.