ரூ.5 லட்சம் கையாடல்; செல்போன் கடை மேலாளர் கைது
ரூ.5 லட்சம் கையாடல் செய்ததாக செல்போன் கடை மேலாளரான காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த அப்துல் ஜபார் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் செல்போன் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் பர்மா காலனியை சேர்ந்த அப்துல் ஜபார் (29) என்பவர் மேலாளராக பணி செய்து வந்தார். மேலும் இவர் கடையில் இருந்து பணத்தை சிறிது சிறிதாக கையாடல் செய்தாராம். இவ்வாறாக ரூ.5 லட்சம் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
கடையின் வரவு செலவு கணக்குகளை பார்வையிட்ட மாரியப்பன் கணக்கில் பணம் குறைவதை அறிந்து அப்துல் ஜபாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லையாம். இதுகுறித்து மாரியப்பன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்துல் ஜபாரை கைது செய்தனர்.