கல்லூரி மாணவரிடம் ரூ.36 ஆயிரம், செல்போன் பறிப்பு

செல்போன் செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து கல்லூரி மாணவரிடம் ரூ.36 ஆயிரம், செல்போனை பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-09 18:45 GMT


செல்போன் செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து கல்லூரி மாணவரிடம் ரூ.36 ஆயிரம், செல்போனை பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓரின சேர்க்கை செயலி

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபர், தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார். இது ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு, வாலிபர் ஒருவரின் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அந்த செயலி மூலம் பழகி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர், கல்லூரி மாணவரிடம், நாம் நேரில் சந்திக்கலாம் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் காலியாக உள்ள மைதானத்திற்கு வந்தால் ஓரின சேர்க்கையில் ஈடுபடலாம் என்று கூறினார்.

பணம், செல்போன் பறிப்பு

இதையடுத்து அங்கு சம்பவத்தன்று இரவு கல்லூரி மாணவர், சென்றார். பின்னர் அந்த வாலிபரை சந்தித்து பேசினார். அப்போது திடீரென்று வந்த மர்ம கும்பல், அந்த வாலிபருடன் சேர்ந்து கொண்டு கல்லூரி மாணவரை மிரட்டியது.

மேலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரத்தை பறித்து கொண்டதுடன், செல்போனையும் பிடுங்கி கொண்டது. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வேறு யாரையும் ஓரின சேர்க்கை ஆசை காண்பித்து பணம் பறித்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்