கலப்பட பொருட்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

கலப்பட பொருட்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

Update: 2023-04-14 18:45 GMT

ஊட்டி

நீலகரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்த குமார், சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு மற்றும் அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையிலுள்ள சுமார் 20 உணவகங்கள், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகளில் ஆய்வு செய்தனர். ஒரு உணவகத்தில் காலாவதியான சப்பாத்தி மற்றும் பரோட்டா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 5 தேனீர் கடைகளில் சாயம் கலந்த டீத்துள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு சுமார் 3½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேற்கூறிய 6 கடைகளுக்கும் தலா ரூ.2000/= வீதம் மொத்தம் ரூ.12000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் இனி அடிக்கடி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்