ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்;

Update: 2022-06-10 14:48 GMT

செய்யாறு

வெம்பாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் கூட்டம் நடந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, தி.மு.க. நிர்வாகிகள் சீனிவாசன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சத்யன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் சுப்பிரமணி, சிட்டிபாபு, அம்பிகாபதி, பெருமாள், திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்