பஸ்சில் ரூ.6 லட்சம் 'அபேஸ்'

வத்தலக்குண்டு அருகே, பஸ்சில் ரூ.6 லட்சம் அபேஸ் செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-27 17:55 GMT

தேனியை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 45). இவர், தேனியில் கல்குவாரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது குடும்பத்துடன் தேனியில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது ஒரு பையில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை மகன் படிப்பு செலவுக்கு வைத்திருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் துணை மின்நிலையம் அருகே தனியார் ஓட்டலில் சாப்பிடுவதற்கு அந்த பஸ்சை டிரைவர் நிறுத்தினர். அங்கு சுந்தரவடிவேல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது பஸ்சில் பையில் இருந்த ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் சுந்தரவடிவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அந்த ஓட்டலின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்