டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2023-09-22 09:21 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதனை ஓரிரு நாட்களில் சரி செய்யவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்