தூத்துக்குடி அருகே கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் உரம் மீட்பு

தூத்துக்குடி அருகே கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் உரத்தை போலீசார் மீட்டனர். அவற்றை கடத்திச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-27 11:33 GMT

தூத்துக்குடி அருகே கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் உரத்தை போலீசார் மீட்டனர். அவற்றை கடத்திச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

உரம்

தூத்துக்குடியை சேர்ந்த தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி ரஷ்யாவில் இருந்து 25 ஆயிரம் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரத்தை இறக்குமதி செய்தது.

இந்த உரத்துடன் கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கடந்த 20-ந் தேதி வந்தது. தொடர்ந்து கப்பலில் இருந்து இறக்கப்பட்ட உரம் லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பணிகள் கடந்த 23-ந் தேதி வரை நடந்தது.

கடத்தல்

இந்த நிலையில் உரத்தை இறக்குமதி செய்து லாரிகளில் குடோனுக்கு கொண்டு செல்லும்போது, 5 லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்ட உரம் குடோனுக்கு வந்தடையவில்லை என்பது தெரியவந்தது.

இந்த லாரிகள் வழியிலேயே உரத்துடன் வேறு எங்கோ சென்று உள்ளன. இந்த லாரிகளில் மொத்தம் 161.120 டன் உரம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட லாரிகளில் உரத்தை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

உரம் மீட்பு

இதுகுறித்து தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் சாயர்புரத்தை சேர்ந்த ஜான்சன் மகன் அன்பரசு சாமுவேல் துரை (வயது 28) என்பவர் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் உரத்தை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று உரத்தை மீட்டனர். தொடர்ந்து உரத்தை கடத்தியவர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்