வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி; தொழிலாளி மீது வழக்கு

வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி; தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-04 17:55 GMT

கீரனூர் அருகே முதுகுளத்தூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர், மூளிப்பட்டி கிராமத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வருவதற்கு கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்லையா என்பவரை அணுகினார். அப்போது அவரிடம் குடும்பத்தோடு ஆடு மேய்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் 3 மாதம் மட்டுமே வேலைக்கு சென்று விட்டு பின்னர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை செல்லையாவிடம் திருப்பி கேட்ட போது அவர் தகாத வார்த்தையால் அன்பரசுவை திட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அன்பரசு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்