ரூ.2¼ கோடி ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு 'சீல்'

ரூ.2¼ கோடி ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு ‘சீல்’

Update: 2023-06-12 19:00 GMT

கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ரூ.2¼ கோடி மதிப்புள்ள மருந்து குடோன் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.2¼ கோடி கட்டிடம்

கோவை கவுண்டம்பாளையம் ஆட்டோ நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டில் 4,675சதுர அடிபரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு மருந்து குடோன் செயல்பட்டு வந்தது. இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் காலி செய்யப்படவில்லை.இந்தநிலையில் மேற்கு பகுதி உதவி நகரமைப்பு பிரிவு அதிகாரி பாபு தலைமையில் அதிகாரிகள் சென்று அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். 4675 சதுர அடிபரப்பளவில் கட்டப்பட்ட இதன் மதிப்பு ரூ.2¼ கோடியாகும்.

மற்றொரு கட்டிடம்

இதேபோல் கோவை காந்திபுரம் 48-வது வார்டு ஜி.பி. சிக்னல் பகுதியில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி சத்யாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த கட்டிடத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கோவை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டுவது, அனுமதியில்லாமல் வர்த்தக கட்டிடங்கள் கட்டுவது போன்றவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்