சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்
குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர்
அந்த வகையில் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 12,974 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.