விருகம்பாக்கத்தில் ஏடிஎம் கார்டு விபரங்களை பெற்று சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ10லட்சம் சுருட்டல்

வெளிநாட்டு வாழ் இந்தியரான பத்ரி நாராயணன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

Update: 2023-02-17 09:55 GMT

போரூர், 

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பத்ரி நாராயணன் (வயது45) சாப்ட்வேர் என்ஜினீயர்.

வெளிநாட்டு வாழ் இந்தியரான பத்ரி நாராயணன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் பத்ரி நாராயணன் குடும்பத்துடன் சென்னை வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற பத்ரி நாராயணன் ரகசிய குறியீட்டு எண்ணை 2 முறை தவறாக பதிவு செய்ததாக தெரிகிறது இதனால் அவரது ஏ.டி.எம் கார்டு பிளாக் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில் பத்ரி நாராயணன் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது அப்போது பேசிய மர்ம நபர் வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன் "வருமான வரி அட்டையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்" என்று கூறி பத்ரி நாராயணனின் ஏ.டி.எம் கார்டு எண் விபரங்களை கேட்டார் தனது ஏ.டி.எம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் இதை உண்மை என்று நம்பிய அவர் தனது கார்டு எண் விபரங்களை அவரிடம் கூறினார் இதையடுத்து அவரது செல்போனுக்கு "லிங்க்" ஒன்றையும் மர்ம நபர் அனுப்பி வைத்தார். அந்த "லிங்க்கை" பயன்படுத்திய சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக ரூ10லட்சம பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது இதை கண்டு பத்ரி நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வங்கி கிளைக்கு நேரில் சென்று விசாரித்தார் அப்போது வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் கைவரிசை காட்டி பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்