சென்னை வாலிபரிடம் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை வாலிபரிடம் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-25 19:42 GMT

திருச்சி விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் நேற்று காலையில் விமான நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது உசேன் (வயது 30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரது உடைமைகளை சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கம் இருந்தது. ஆனால் அதற்கான எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்