ரூ.10 லட்சம், 24 பவுன் நகை மோசடி

பேக்கரி அதிபரிடம் ரூ.10 லட்சம், 24 பவுன் நகை மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-06-08 19:27 GMT


விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். பேக்கரி தொழில் செய்து வரும் இவரது மனைவி வளர்மதி (வயது 51). இவர்களது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் முத்து கணேஷ் தான் வீடு கட்டுவதற்காக வளர்மதியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. வளர்மதி நம்பிக்கையின் அடிப்படையில் முத்துகணேசுக்கு பல தவணைகளாக ரூ. 10 லட்சமும், தனது 24 பவுன் நகைகளையும் கொடுத்துள்ளார். மேலும் பேக்கரிக்கு சரக்கு வாங்கவும் பணம் கொடுத்த நிலையில் அதற்கும் சரிவர கணக்கு கொடுக்காமல் முத்து கணேஷ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீடு கட்ட கொடுத்த பணத்தை கேட்ட போது முத்து கணேஷ் வேலையை விட்டு நின்று விட்டார். இதனை தொடர்ந்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் முத்து கணேஷ் மீது விருதுநகர் பஜார் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்