ரெயில் டிக்கெட் ரத்துக்கான பணத்தை திரும்ப பெற முயன்றவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

ரெயில் டிக்கெட் ரத்துக்கான பணத்தை திரும்ப பெற முயன்றவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-07-19 18:45 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(வயது 50). இவர் கடந்த 11-ந் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரெயில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். அதற்கு கட்டணமாக ரூ.2022 செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அதை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.1,980 மட்டுமே திரும்ப கிடைக்கும் என்று சேகரின் செல்போன் எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சேகர், இணையதளத்தில் இதுகுறித்து தேடி அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணிற்கு பேசியுள்ளார். அப்போது அந்த எண்ணில் பேசிய நபர், டிக்கெட் ரத்து செய்த பணத்தை பெறுவதற்கு சேகரின் செல்போனுக்கு ஓ.டி.பி. வரும் எனவும், அதனை கூறுமாறும் அந்த நபர் சேகரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய சேகரும் தன்னுடைய செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. நம்பரை கூறியுள்ளார். இதை தொடர்ந்து அந்த நபர் சேகரின் வங்கி கணக்கில் இருந்து 4 தவணைகளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 877 எடுத்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சேகர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்