நிலம் விற்பதாக ரூ.1¾ கோடி மோசடி:ஓய்வு பெற்ற துணைவேந்தர் உள்பட 2 பேர் கைது

நிலம் விற்பதாக ரூ.1¾ கோடி மோசடி செய்த ஓய்வு பெற்ற துணைவேந்தர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-15 18:45 GMT

கம்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கம்பத்தை ஊரைச் சேர்ந்த தூயமணி (வயது 65) என்பவர் தனக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முயன்றார். அந்த நிலத்தை வாங்குவதற்காக தூயமணியிடம் நான் ரூ.1 கோடியே 80 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த மக்கள் அன்பன் (44) என்பவரின் பேச்சைக் கேட்டு அவர் நிலம் விற்பனைக்கான பத்திரம் பதிவு செய்து கொடுக்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.

அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் பேரில் இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார், இந்த வழக்கில் தூயமணி, மக்கள் அன்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான தூயமணி ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்