சோமரசம்பேட்டை:
ராம்ஜிநகரில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ராம்ஜிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திநகர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மாயகிருஷ்ணன்(வயது 38) அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் கஞ்சாவை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை ராம்ஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.