நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி பொன்நகர் கிராமத்தில், இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு வழித்தட பிரச்சினை இருந்து வந்தது. இதனிடையே ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கிராமத்திற்கு செல்லும் தார்சாலையில் நேற்று, மரக்கட்டைகள், முள்செடிகள் மற்றும் கற்களை போட்டு அடைத்தனர். இதனால் பொதுமக்கள் சென்றுவர முடியாமல் தவித்தனர். இது குறித்து, தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சொந்த பிரச்சினைகளுக்காக சாலையை அடைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்கள் மரக்கட்டைகள் மற்றும் முள்செடிகள், கற்களை அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.