கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Update: 2022-06-28 16:17 GMT


கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆளுநர் நியமனம் ராகவன் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் முத்துசாமி, ஆதிகேசவன், எத்திராஜ், மதியழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். முன்னதாக கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக ஆற்காடு ஸ்டீல் உரிமையாளர் எஸ்.ஆர்.மூர்த்தி, செயலாளராக களஞ்சியம் பெயிண்ட்ஸ் உரிமையாளர் ஆர்.பால கிருஷ்ணன், பொருளாளராக பில்டிங் காண்டிராக்டர் சி.முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் நியமனம் ராகவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முன்னாள் செயலாளர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். 12 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நகரமன்ற துணைத்தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் ஞானராஜ், மனோகர்குமார் சுரானா, பெருமாள், முன்னாள் சங்க பொருளாளர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் சங்க தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்