பொள்ளாச்சி
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சேவல் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேவல் வைத்து சூதாட்டம் நடத்தியதாக பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த அருண்குமார்(வயது 36), குறிஞ்சி நகரை சேர்ந்த யோகேஷ் குமார்(24), கோட்டூர் ரோட்டை சேர்ந்த காமாட்சி சுந்தரம்(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 3 சேவல்கள், ரூ.2 ஆயிரத்து 40 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.