கடலூரில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடலூரில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ..2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-24 18:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "​கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா ப. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி சிவசங்கரி (வயது 33) நேற்று (23-07-2022) பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர்மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

​உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்