ஓட்டல் உரிமையாளரிடம் வழிப்பறி; 3 பேருக்கு வலைவீச்சு
பணகுடி அருகே ஓட்டல் உரிமையாளரிடம் வழிப்பறி செய்ததாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணகுடி:
தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜா (வயது 23). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை மூடிவிட்டு தன்னுடைய மொபட்டில் தெற்கு வள்ளியூர் புறப்பட்டார். அப்போது ஒருவர் அருண்ராஜா மொபட்டை மறித்து தன்னை தெற்கு வள்ளியூரில் இறக்கிவிடும்படி கூறினார். இருவரும் தெற்கு வள்ளியூர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது 2 பேர் அவர்களை வழிமறித்து அருண்ராஜாவிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதுபற்றி அருண்ராஜா பணகுடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.