பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரம் கொள்ளை

வெள்ளிச்சந்தை அருகே பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரத்தை மேஜையுடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-10 18:45 GMT

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரத்தை மேஜையுடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெட்ரோல் நிலையம்

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ராமநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் உள்ளது. இங்கு மேலாளராக காருபாறை கல்படியை சேர்ந்த அய்யப்பன் (வயது 53) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் வேலை முடிந்ததும் பெட்ரோல், டீசல் விற்பனையான ரூ.27 ஆயிரத்தை மேஜையில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அங்கு இரவு நேரபணியில் 2 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் அயர்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது.

மேஜையுடன் தூக்கி சென்றனர்

சிறிது நேரம் கழித்து ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது அங்கு விற்பனை பணம் வைத்திருந்த மேஜை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் மேஜையை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், திறக்க முடியாததால் அவர்கள் மேஜையை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் அய்யப்பன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேஜையுடன் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்