சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-31 21:54 GMT

சேலம்,

சேலம் மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், மத்திய அரசு ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ.10 ஆயிரம் கடன் உதவியை சாலையோர வியாபாரிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார், ஜவுளி சங்க தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்