ஆக்கிரமிப்புகளால் குறுகலான சாலைகள்
வத்திராயிருப்பில் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகலாக மாறிவிடுகிறது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலை, அழகாபுரி செல்லும் சாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை, மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிறைந்து உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கடைகளுக்கு முன்பு உள்ள சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். ஆதலால் அந்த சாலையானது மிகவும் குறுகலாக மாறி விட்டது. பள்ளி நேரங்களில் மாணவர்கள் போக்குவரத்து ெநரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்து நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.