ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலைமறியல்

காரியாபட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-29 19:53 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு

காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட அச்சம்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் பொங்கல் விழாவின்போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தனிப்பட்ட நபர் குறிப்பிட்ட அரசு பொது இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இடத்தில் முளைப்பாரி போடமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பக்தர்கள் முளைப்பாரிகளை வளர்க்க குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது முளைப்பாரி போடும் இடத்தில் இருக்கும் நபர் தடுத்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் காரியாபட்டி மெயின் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்துறையினர் பார்வையிட்டு அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முளைப்பாரி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவுடன் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்