இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள நாகநாதபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடாக தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ெபாதுமக்கள் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரியும் நிலத்தை மீட்க வலியுறுத்தியும், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.