சாலை சீரமைப்பு பணி தொடங்கியது

‘தினத்தந்தி’ செய்தி காரணமாக வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது.

Update: 2022-05-31 18:36 GMT

கூத்தாநல்லூர்;

'தினத்தந்தி' செய்தி காரணமாக வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது.

போக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் அருகே வெள்ளையாற்றின் கரையோரத்தில், கீழபனங்காட்டாங்குடியிலிருந்து வடகட்டளை மாரியம்மன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.

குறுகலான சாலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் வடகட்டளை கோம்பூர் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் சரிவு ஏற்பட்டு சாலை சரிந்து விழுந்தது. இதனால் இந்த சாலை குறுகலான சாலையானது. மேலும், சேதமடைந்த சாலையில் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் சென்று வருவதில் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைப்பு பணி தொடங்கியது

இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தற்போது சாலை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்